Friday, March 19, 2010

18.03.2010 தேதிய என் கவிதை...

18.03.2010 தேதிய என் கவிதை...

நான்
என் நாயினை கூட்டிகொண்டு
வீதியில் காலாற நடந்தேன் ...

என்னை போல பலரும்
தங்கள் நாய்களை
கயிறு கட்டி கூட்டிகொண்டு
நடந்து கொண்டு இருந்தனர் ...

வழியில் நாய்கள்
ஒன்றை ஒன்று பார்த்து
காதலுடன் குறைத்துகொள்கின்றன...

ஏனோ மனிதர்கள் மட்டும்
இருக்கமான முகங்களுடன்
நடந்து கொண்டு இருந்தனர் ...

அப்போது தான் எனக்கு புரிந்தது
நாய்கள்
மனிதர்களை வாக்கிங்
கூட்டிகொண்டு வந்திருக்கின்றன என்று....

Thursday, March 18, 2010

அம்மா போலத்தான் வயலும்

வயலில்
பிடுங்கி நடப்பட்ட
நெல் நாற்றும்...

அம்மாவின் கருவறையில்
முளைத்த நானும்...

நெல் அறுக்கப்பட்டதால்
சில தாள்களும் ...
நான் பிறந்ததால்
சில வடுக்களும்...

அம்மா போலத்தான்
வயலும்..